Posts

Showing posts from July, 2022

நக்கீரதேவ நாயனாரின் - கார் எட்டு | Nakkeeradeva Nayanar - Car Eight

நக்கீரதேவ நாயனாரின்  - கார் எட்டு Nakkeeradeva Nayanar - Car Eight பண் : பாடல் எண் : 1 அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்குங் கார். பொழிப்புரை : பொழிப்புரையை எழுதவில்லை குறிப்புரை : எல்லா வெண்பாக்களிலும் ``கார்`` என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `எங்கும் விரவி எழுந்து சடைபோல் மின்னி அடை வுற்றே சங்கம் போல் முழங்கும்` என இயைத்து முடிக்க. `அரவினங்கள் அணைய` என இயையும். ``அரைக்கு`` என்பதை `அரைக்கண்` எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம். அசைத்த - கட்டிய. `புற்றில் அணைய` எனச் சொல்லெச்சம் வருவிக்க. சங்கு திருமாலுக்குச் சிறப்பாக உரித்தாயினும், `பிறர் அதனைக் கொள்ளலாகாது` என்பது இல்லை. வெற்றிச் சங்குத் தீயோரைக் காய்வார் பலரும் கொள்வதே. அதனால் இங்குச் சிவபெருமான் சங்கு உடைமையைக் கூறினார். `அவன் கைச்சங்கம் போல்` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. பண் : பாடல் எண் : 2 மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார். பொழிப்புரை : பொழிப்...